எனது பெயர் ரகுபதி.என் அப்பா விவசாயத்தைக் கவனித்து வருகிறார்.
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் கடந்த 31.7.2017 இரவு 2 இஞ்ச் மழை பெய்தது.
மழைநீர் சேகரிப்பு அமைப்பு அமைக்காததால் என் வயலைச் சுற்றி அமைந்த இடங்களில் வயல்களில் மழைநீர் தேங்காமல் ,பயனில்லாமல் ஓடையில் கலந்து சென்றுவிட்டது.
திரு.பிரிட்டோராஜ் அவர்களின் ஆலோசனைப்படி எனது ஒவ்வொரு வயலிலும் ,சரிவின் குறுக்கே அடிப்பகுதியில் Jcb இயந்திரம் மூலம் 30*3*2 அடிகள் கொண்ட குழி எடுத்து தோண்டிய மண்ணை குழியின் கீழ் உள்ள வரப்பின் மேல் போட்டுவிட்டேன்.அனைத்து வயலிலும் அமைத்தேன். 4.5 ஏக்கருக்கு குழி எடுக்க ரூ.24000 செலவானது.இதில் 6000அடி நீளமுள்ள குழி தோண்டப்பட்டது. இந்த ஒரு நாள் மழையில்
இக்குழிகளில் மொத்தமாக சுமார் 9.3 லட்சம் லிட் நீர் சேமிக்கப்பட்டது. இது 60*60*10 அடி அளவுள்ள ஒரு பண்ணைக்குட்டையின் கொள்ளளவாகும்.
ஆரம்பத்தில் இந்த மாதிரி வயலில், மழைநீர்சேகரிப்பில் ஆர்வமின்றியும் இடம் வீணாகிறதே என கவலைப்பட்ட என் அப்பாவிற்கு இக்குழி எடுத்து வரப்பமைக்கும் திட்டத்தால் இரட்டைப் பலன் கிடைத்தது குறித்து பெரு மகிழ்ச்சி.
இம்மாதிரி அமைப்பால் சரிவாக இருக்கும் மலையடிவாரம் முதல் அனைத்து வகை மண் உள்ள அனைத்து தமிழகப் பகுதிகளுக்கும் தென்னை மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கிடையேயும் மானாவாரி நிலங்களிலும் அமைக்க ஏற்ற, குறைந்த செலவில் அருமையான திட்டம்.கிணறுகளிலும் போரிலும் நீர் பெருமளவு உயர அருமையான அமைப்பு.
மகிழ்ச்சி.