Write Check to:

REVIVING WATER RESOURCES INC
317 MONTELENA PL
CARY NC 27513-8456

For Direct Deposit use Routing Number (RTN): 053000219
For Wire Transfers use Routing Number (RTN): 121000248

Account number: 2193716004
REVIVING WATER RESOURCES INC
Wellsfargo

இரண்டு வகையான முயற்சிகளை நாங்கள் செய்கிறோம்.

1) ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு முழு அளவிலான சிறிய குறுங்காடு அமைத்தல்.

 

மண் வளமே மனித வளம். மண் வளத்தை மேம்படுத்துதல் என்பது நல்ல விவசாயத்திற்கான தன்மையை தக்க வைத்தல், மழைப் பொழிவு, பறவைகள் மற்றும் சிறு விலங்குகளுக்கான உறைவிடம் ஏற்படுத்துதல், சீதோஷண நிலையை முன்னேற்றுதல், நிலத்தடி நீர் தேக்கத்திற்கான சூழ்நிலையை உருவாக்குதல் என்பன உட்பட பல விஷயங்களை உள்ளடக்கியது. இதற்கான முயற்சி தான் குறுங்காடுகள் அமைத்தல்.

நம் அமைப்பின் முயற்சி என்னவென்றால், ஒவ்வொரு கிராமத்திலும், ஒரு சிறிய அளவிலான பகுதியை தேர்வு செய்து, அந்த அந்த பகுதிகளுக்கு உகந்ததும், சீதோஷண நிலைக்கு ஏற்றதற்கும் ஆன மரங்களைத் தேர்ந்தெடுத்து, நட்டு, பராமரிப்பது தான். இதற்கான காரணம் மேலே சொன்ன சூழலியல் காரணங்கள் போக, இது அந்தந்த பகுதிகளில் உள்ளவர்களுக்கு ஒரு உதாரணமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகவும் இருக்கும் என்று உறுதியாக நம்புகிறோம்.

சரி. இதற்கு ஆகும் செலவு என்ன?

ஒவ்வொரு இடத்தில் இதை அமைக்க சுமார் 50,000 ரூபாயும், தொடர்ந்து தண்ணீர் விட்டு பராமரிக்க வருடம் 10,000 ரூபாயும் ஆகும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.

இது வரை தேரிவு செய்யப்பட்ட இடங்கள்:

1. சகுனிபாளையம் (கன்று நடவு: நவம்பர் 11, சனி)
2. வெங்கிட்டி பாளையம்
3. காங்கயம் பிரிவு
4. வரப் பாளையம்
5. நஞ்சியம் பாளையம்
6. வடுக பாளையம்
7. மணக்கடவு (அமைப்பு தயார், தேதி முடிவு செய்யப் படவில்லை)
8. தேர்ப்பட்டி (நவம்பர் 10, வெள்ளி)
9. பச்சா பாளையம் (நவம்பர் 12, ஞாயிறு)
10. வெள்ள கோவில்
11. வாவிப்பாளையம்
12. கொல்லபட்டி (இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது)

2) ஒவ்வொரு கிராமத்திலும் ஆழ் துளாய் கிணற்றின் நீர் மட்டத்தை மழை நீர் சேமிப்பின் மூலம் உயர்த்துதல்.

பொதுவாக விவசாயத்திற்கான தண்ணீர் என்பது, ஒன்று அந்த விவசாய நிலத்தில் இருக்கும் சொந்த கிணறு, குட்டை போன்றவற்றில் இருந்து வரும். அல்லது, ஏரி, குளம், வாய்க்கால் பாசனம் போன்ற பொதுப் பாசன முறைகள் வழியாக வரும்.

பொதுப் பாசன நீர் ஆதாரங்கள் என்பது மழை வரத்து, மற்றும் அந்த நீரைத் தேக்கி வைக்கும் இடத்திற்கான நீர் வழிப் பாதையை முறையாக தடுப்புகள் இல்லாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுதல் போன்ற விஷயங்கள் மூலம் ஆரோக்யமாக வைத்துக் கொள்ள முடியும். மழைப் பொழிவில் மாற்றத்தை ஏற்படுத்துவது என்பது ஓரிரு நாளில் நடக்கக் கூடியது அல்ல. நீர் வழிப் பாதையை சீர்படுத்துவது, தேக்கி வைக்கும் இடங்களை சீர்படுத்துவது போன்ற நிறைய காரணிகள் உள்ளன. மேலும் இது ஒருவர் மட்டுமே முயற்சி எடுத்து சீர்படுத்தக் கூடிய மாற்றம் அல்ல.

அடுத்து, மேல சொன்னது போல, சொந்த நீர் ஆதாரங்களான கிணறு மற்றும் ஆழ் துளாய் கிணறுகள் உள்ளன. அவற்றின் நிலைகள் இன்று என்ன?

நம் பகுதிகளில், ஆழ் துளாய் கிணறுகள் தான் பெரும்பாலான நீர் ஆதாரமாக இருக்கிறது. இந்த நிலையில், நிலத்தடி நீர் மட்டம் என்பது இன்று மிகவும் ஆபத்தான அளவில் இருக்கிறது. 900 அடி மற்றும் 1000 அடி ஆழம் வரை சென்றால் கூட இன்று நீர் இல்லாத நிலையில், மேலும் மேலும் ஆழத்தை அதிகப் படுத்தி எப்படியாவது நீரை எடுக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தில் விவசாயிகள் இருக்கிறார்கள். இப்படி ஆழத்தை அதிகப் படுத்திக் கொண்டே போவதில் சுற்றுச் சூழல் ஆபத்துகள் நிறைய உள்ளன. இதை எப்படிச் சரி செய்வது?

இதை சரி செய்ய நாம் முதலில் செய்ய வேண்டியது மழை நீரை சேமிப்பது தான்.

மழை நீரை அந்த அந்த விவசாய நிலங்களில் பண்ணை குட்டைகள் அமைப்பது மூலம் செய்யலாம். அதற்கு அடுத்ததாக, இந்த ஆழ் துளாய் கிணறுகளின் நீர் மட்டத்தை உயர்த்த, இப்படி சேமிக்கும் மழை நீரை நேரடியாக இந்த கிணறுகள் உள்ளே போகுமாறு, நிரூபிக்கப்பட்ட முறைகளின் வழியாக அமைப்பதின் மூலம் செய்யலாம்.

ஒவ்வொரு கிராமத்திலும் இதை ஒரு மாதிரி திட்டமாக செயல்படுத்தி அந்தப் பகுதியில் உள்ள பிற விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முயலும் முயற்சி இது.

இதற்கு நன்கொடை அளிக்க விரும்புவோர், மேலே கொடுக்கப்பட்டுள்ள வங்கி கணக்கிற்கு காசோலையாகவோ, நேரடி பரிமாற்றமாகவோ செய்யலாம். இதற்கு ஆலோசனை அளிக்க விரும்புவோரும், கேள்விகள் எதாவது இருந்தாலும், நீங்கள் எங்களை info@re-wa-re.org என்ற முகவரியில் அணுகலாம்.

Share This